என் வாசிப்பு பழக்கமும், புத்தகங்களுடனான உறவும், ஐந்தாம் வகுப்பிலிருந்து துவங்கியது. தினத்தந்தியின் கன்னித்தீவு தான் என் வாசிப்பின் துவக்கம். அதிகாலையில் எழுந்து கோயிலுக்கு போகவேண்டும் என்பது எங்கள் வீட்டில் எழுதப்படாத சட்டமாக இருந்தது. தினத்தந்தியில் வெளிவந்த கன்னித்தீவிற்காகவே ஆர்வமாக காலையில் எழுந்து கோயிலுக்கு சென்ற நினைவுகளும் உண்டு. கன்னித்தீவில் துவங்கிய வாசிக்கும் ஆர்வம் சிறுவர் மலர், தங்கமலர் என்று பிற தினசரிகளின் சிறுவர்களுக்கான இதழ்களுக்கு திரும்பியது.
சிறுவர் மலர்களை பள்ளிக்கு எடுத்துச்சென்று பெஞ்சுக்கடியில் வைத்து வாசித்த அனுபவங்களை நினைத்துப்பார்த்தால் இன்றும் சிரிப்புதான் வருகிறது. கிறித்தவ குடும்பத்தில் பிறந்த எனக்கு சிறுவர் மலர் வாயிலாக இந்து மத புராணக்கதைகள் அத்துபடியாயின. (பெரியாரின் பகுத்தறிவை பின் நாளில் புரிந்துகொள்வதற்கு சிறுவர்மலர் தான் துவக்கபுள்ளியாக இருந்தது.)
இதற்கிடையே கிறித்தவ பாதிரியாராக வேண்டும் என்பதை என்னில் விதைத்தார் கன்னியாஸ்திரியாக இருந்த என் பாட்டி (அப்பாவின் சித்தி). அதனடிப்படையில் கிறித்தவ புனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளை எனக்கு அறிமுகப்படுத்தினார். இதனோடுகூட இயேசு சபைக் குருக்கள் வெளிக்கொணர்ந்த 'நற்கருணை வீரன்' என்கிற நான்கு பக்க காமிக்ஸ் வடிவிலான இதழ்களும் ஏறக்குறைய எல்லாக் கிறித்தவ புனிதர்களை பற்றிய புத்தகங்களையும் வாசிக்க வைத்தது,
ஏழாவது, எட்டாவது படிக்கும் காலங்களில் எந்த அளவிற்கு கிறித்தவ, இந்துமதக் கதைகளை தெரிந்து கொண்டேனோ அதைவிட அதிகமாக வாசிப்பின் சுவையையும் ஆர்வத்தையும் கொண்டிருந்தேன்.
பத்தாவது முதல் பன்னிரென்டாம் வகுப்புவரை பெரிதாக வாசிப்பு ஏதும் நிகழவில்லை.
அதன்பிறகு ஏற்காட்டில், சலேசிய கல்லூரியின் அழகிய நூலகம் என் வாசிப்பை வேகப்படுத்தி ஆழமாக்கியது. அங்கு பயின்ற இந்திய தத்துவங்களும், மேற்கத்திய தத்துவங்களும்; என் சிந்தனைப் பார்வையைச் செழுமையாக்கின. குறிப்பாக இருத்தலியல் மற்றும் பின்நவீனத்துவ கட்டுடைப்புகளின் பின்னனியில் அனைத்தையும் புரிந்துகொள்ள துவங்கியிருந்தேன். இருத்தலியலில் சார்த்தர் மற்றும் ஆல்பர்ட் காம்யுவின் புதினங்கள் மார்ட்டின் ப்யுபரையும், கீர்க்ககார்ட்டையும் மெல்ல ஓரம்கட்டின. அந்த வயதில், பின் நவினத்துவத்தின்; டெரிடாவுடைய கட்டுடைப்பும் ப்புகோவின் அதிகாரத்திற்கும் அறிவுகக்குமான உரையாடலும் ஆழமான தாக்கத்தை உண்டாக்கின.
நிறைய வாசித்தலின் காலம் என் வாழ்க்கையில் துவங்கியது இங்குதான்.
அதன்பிறகு...மதுரை அமெரிக்கன் கல்லூரியில் என் வாசிப்பின் வசந்தகாலம் ஆங்கில இலக்கியம் வாயிலாக ஆரம்பமானது. இதில் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. குறிப்பாக அப்சர்ட் ட்ராமா இலக்கியங்களை (யூஜின் அய்னெஸ்கோ, அன்டன் செக்கவ்) அறிமுகப்படுத்திய இளங்கோ சார், மில்டனை மிக தத்துருபமாக வகுப்பில் நாற்காலியில் உட்கார்ந்து படியே நடித்து காட்டிய பாண்டியன் சார்... இந்திய ஆங்கில இலக்கிய ஆராய்ச்சித்துறையில் இருந்த ப்ரொபசர் பிரமிளா என இலக்கியம,; தத்துவ பின்னனியில் என்னோடு இணைந்துகொண்டது. ஆங்கில இலக்கியத்தில் ஆரம்பித்த தேடல் மதுரை புத்தக கண்காட்சியின் வாயிலாக தமிழ் இலக்கியம் மற்றும் எழுத்துலகின் பால் திரும்பியது. புதுமைப்பித்தன் துவங்கி எஸ். ராமகிருணஷ்னன் வரை பல எழுத்தாளர்களை வாசித்தேன்.
திருச்சியில் சிறிது காலம் இருந்தபொழுதுதான் தத்துவமும் இலக்கியமும் முழுமை பெறத் தொடங்கின. அங்கு தான் தத்துவம் மற்றும் இலக்கியம் இவை இரண்டிற்குமான முழுபுரிதலை உண்டாக்கிய 'அரசியல் கட்டமைப்பை' கண்டுகொள்ள ஆரம்பித்தேன் சோசலிசமும், மார்;க்சியமும், கம்யூனிசமும், பெரியாரிசமும் இலத்தின் அமெரிக்க விடுதலை மெய்யியலின் பின்புலத்தில் அறிமுகமாயின. இவற்றை என்னிடம் கொண்டுவந்து சேர்த்த என் நண்பன் விசயன் மிக முக்கியமானவன்.
பிறகு கோயம்பத்தூரில்; சமூகவியல் படிக்கும்பொழுது அரசியல் மற்றும் சமூக சிந்தாந்தங்கள் மிக தெளிவாக புரியஆரம்பித்தன.
இவற்றின் அடிப்படையில் இன்று கல்வி பணியில் மாண்டிசோரி, ஜான் ஹோல்ட்... என எனக்கான தேடலில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறேன்.
இதை ஏன் எழுதுகிறேன் என்று தெரியவில்லை... எழுதவேண்டும் என்று தோன்றிற்று. எழுதினேன்...பகிர்கிறேன்.

No comments:
Post a Comment