Wednesday, August 1, 2018

எனக்கான நடுகல்லைத் தேடி....


எனது இயற்;பெயர் அந்துவன். பாரம்பரிய கிறித்தவ குடும்பத்தில் பிறந்ததால் நான் அவ்வாறு பெயரிடப்பட்டேன். புனித அந்தோனியாரின் நாளான செவ்வாய் கிழமையில் பிறந்ததால் எனக்கு 'அந்துவன்' என்கிற பெயர் இடப்பட்டது. (பிரஞ்சுமொழியில் அந்தோனியார் - அந்துவன் என்று அழைக்கப்படுகிறார்)
இந்தப் பெயரோடு வளர்ந்துவந்தேன். ஒரு குறிப்பிட்ட வயதில் தமிழிலக்கியம் மற்றும் தமிழ் மீதான ஈர்ப்பின்; காரணமாக 'அந்துவன்' என்பதை தவிர்த்து. 'ஆபுத்திரன்' என்கிற பெயரில் எழுத ஆரம்பித்து.. அவ்வாறே நண்பர்கள் வட்டத்திலும் அறியப்பட்டேன்.
நிற்க.
ஆபுத்திரன் என்கிற பெயரை தேர்ந்தெடுத்ததற்கும் ஒரு காரணமிருந்தது. சிலப்பதிகார மணிமேலையையொட்டி வரும் கதாரபாத்திரம் இந்த 'ஆபுத்திரன்'.  'ஆ' என்றால் பசு 'புத்திரன்' என்றால் மகன். ஆக பசுவின் பிள்ளை. இதை இன்னொரு விதமாகவும் சொல்லலாம். அவன் பிறப்பு எவரும் அறியாதது. அதாவது அவனின் மூலமூம் கோத்திரமும் யாருக்கும் தெரியாது. ஆக ஆபுத்திரன் எங்கிருந்து தோன்றினான் என்பது ..... விடை தெரியாக் கேள்விதான்.
ஆபுத்திரனின் மற்றொரு முக்கியமான பரிமாணம்...
மணிமேகலையிடமிருந்த அமுதசுரபி அட்சையப்பாத்திரம் கடைசியாக ஆபுத்திரனின் கைகளில் வந்துசேருகிறது. ஆனால் அந்த காலக்கட்டதில் மக்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்ததால் அமுதசுரபிக்கான தேவையே இல்லாமல் போகிறது. எனவே ஆபுத்திரன் அமுதசுரபியோடு கடலில் விழுந்து தன்னை மாய்த்துக்கொள்கிறான். சமூகத்திற்கு பயணில்லாத போது ஆபுத்திரன் தான் வாழ்வதில் பொருளில்லை என்றாகிறான்.
இந்த இரண்டின் அடிப்படையில் எனக்கு நானே 'ஆபுத்திரன்' என்கிற பெயரிட்டுகொண்டேன்.
நிற்க.
எனக்கு அந்துவான் என்கிற பெயரி;ல் அவ்வளவு ஈடுபாடு இல்லாமல் போனதற்கு அப்பெயர் மேற்கத்திய சாயலில் இருந்ததும் ஒரு காரணம்.
ஆனால்...
சமீபத்தில் கீழடி அகழ்வாராய்ச்சி தொடர்பாக.. மதுரை மற்றும் வைகை மற்றும் பாண்டிய நாட்டின் வரலாறுகள் மற்றும் தெல்லியல் சார்ந்த கல்வெட்டுக்கள்இ நடுகற்கள்இ  குத்துகற்கள்... என தொடர்ச்சியாக தேடி வாசிக்கவும் பயணிக்கவும் செய்யத் தொடங்கிய பிறகு 'அந்துவன்' என்பது ஒரு தமிழ் வீரனின் பெயர் என்பது ஏதேச்சையாக தெரியவந்தது.
ஆர்வமுடன் தேடிவாசிக்க ஆரம்பித்தேன.;
'சில ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை ஆய்வாளர்களால் வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள புலிமான்கோம்பை கிராமத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் மண்ணுக்குள் புதையுண்டுகிடந்த ஒரு நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது....
அந்த நடுகல்... பசுக்களைக் கவர்ந்து வரும்போது தாக்கப்பட்டு இறந்துபோன வீரன் 'அந்துவன்' நினைவாக நடப்பட்ட வீரக்கல். இதில் ஆச்சரியம் என்னவென்றால் தமிழ் பிராமியில் எழுதப்பட்ட இந்தக் கல் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதன் காலம் சுமார் 2400 ஆண்டுகள் என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.  இந்திய  அளவில் இதுவரை கண்டறியப்பட்ட நடுகற்களில் மிகப்பழமையானது இது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால்இ பரந்த பாரத தேசத்தில் கல்லிலே பொறிக்கப்பட்டு நமக்கு கிடைத்துள்ள முதல் பெரும் வீரனின் பெயர் அந்துவன்.
ஹா ஹா....வரலாற்றில் நாம் இதுவரை படித்த அனைத்து வீரர்களும்  அந்துவனுக்கு பிந்தியவர்களே.'
அந்துவனும் நானே! ஆபுத்திரனும் நானே! என் பெயரைத் தேடி...  ஒரு மோட்டர் சைக்கிள் பயணம்.... ரெடி....


குறிப்பு: நடுகல் அல்லது வீரக்கல் என்பது ஏழவகைப் போர்களிலும் சிறப்பான வீரத்தை வெளிப்படுத்தியவனின் நினைவாக அமைக்கப்படுவது.

1 comment:

  1. பாவாடையா இருந்தா எப்படியெல்லாம் உருட்ட வேண்டி இருக்கு....

    ReplyDelete