__________________________________________
"யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்து எதற்கு? ஒரு இலக்கியவாதி அல்லது எழுத்தாளன் என்பவன் சமூகத்தின் பிரதிபலிப்பாக மட்டுமல்லாமல், சமூகத்தின் மனசாட்சியாகவும் இருக்க அழைக்கப்படுகிறான்.
அதிலும் குறிப்பாக வரலாற்றுச் சிறுகதை எழுதுபவன் வரலாற்றினூடாக பயணித்து, சமகால (இன்றைய) வரலாற்றை கட்டமைப்பதில் பெரும் பங்காற்றுகிறான். இது அவனுக்கு மிகவும் சிக்கலான, நுட்பமான சவாலாவும் இருக்கிறது."
-Gabriel Aaputhiran.
'வரலாற்று சிறுகதை எழுதலாமே', என்கிற எண்ணம் எழுந்தவுடன் இரண்டு விசயங்களைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.
முதலாவது 'சிறுகதை' என்பதைப்பற்றியது இரண்டாவது 'வரலாறு' என்பதைப் பற்றியது.
ஏற்கனவே பள்ளியில் வரலாற்றாசிரியர் (History Teacher) என்கிற அடிப்படையில் வரலாற்றை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டிருப்பதால் இயல்பாகவே வரலாற்றாளனாக (Historian) என்னை உருவாக்கிக்கொள்ளும் செயல்பாடுகளை மிக கவனமாக என்னிடத்தில் கட்டமைத்துக்கொண்டிருந்தேன்.
அந்த வகையில் வரலாற்றை பற்றிய புத்தக வாசிப்பைத்தாண்டி (book reading) பயணங்களின் வழியான கள வாசிப்பு (field reading) என்பதையும் மிக முக்கிய கூறாக (factor) மாற்றிக்கொண்டேன்.
ஏனெனில் ஏட்டில் (textual context) இருக்கும் வரலாற்றிற்கும் நேரடியாக களத்தில் (field context) கிடைக்கப்பெறும் வரலாற்றிற்கும் பெருத்த வேறுபாடு இருப்பது மிக அப்பட்டமான உண்மை என்பதை கண்டுபிடித்திருந்தேன்.
இதனோடு கூட என் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தது போல வாய்மொழி (oral tradition) என்கிற வரலாற்றைப் பற்றி மிக கவனமாக இருந்தேன். வாய்மொழி அல்லது நாட்டார் வழக்காற்றியல் (folklore) அடிப்படையிலான வரலாற்றை வாசிப்பதில் புராணச்செய்திகளுக்கும் (mythological aspect) வராலாற்றுச் செய்திகளுக்குமான (Historical - factual aspect) மிக நுட்பமான வேறுபாட்டின் பொருட்டு கவனமுடன் இருத்தல் அவசியமாகிறது.
உதாரணமாக, 'மிகைப்படுத்தப்படுதல்' மற்றும் 'பிம்ப கட்டமைத்தல்' என்பது புராணமயமாக்கலின் (mythification factors) கூறுகளாக உள்ளன. ஆனால் வரலாறு என்பது இந்த அதீத பிம்ப கட்டமைத்தலையும், மிகைப்படுத்தலையும் மிக உறுதியாக, கடுமைத்தன்மையுடன் (strictly avoids) தவிர்த்துவிடுகிறது. அதற்கு மாறாக மிக எதார்த்தமான(realistic) அறிவியல் (scientific) பூர்வமான சார்புநிலையற்ற (neutral) ஒரு நிகழ்வை நிகழ்வாக மட்டுமே கட்டமைக்க விழைகிறது.
இதன் அடிப்படையிலே, எனது 'ஒரு விறலியின் காதல்' என்கிற சிறுகதையில் வரும் பரவை நாச்சியார் (ஆடல்மகளிர்) இராஜேந்திர சோழனை வெகு இயல்பாக ஒருமையில் அழைத்து உரையாடுவதாக காட்சிகளை அமைத்திருந்தேன்.
இதற்கான காரணங்கள் பின்வருவன:
முதலாவது, இராஜேந்திர சோழன் என்பவரைப் பற்றி பொதுபுத்தியில் ( common sense) உருவாக்கப்பட்டிருக்கும் மிகைப்படுத்தப்பட்ட பிம்பத்தை கட்டுடைப்பு செய்தல்.
இரண்டாவது, விலைமகளிர் என்பதை 16 மற்றம் 17 ஆம் நூற்றாண்டுகளின் பார்வையில் வைத்து பார்க்காமல் 10 மற்றும் 11 ஆம் நூற்றாண்டுகளின் பார்வையில் அல்லது வரலாற்றின் அடிப்படையில் வைத்து பார்த்து பரவை நாச்சியாரை ஒரு தன்னிச்சயையான, சுதந்திரமான, அறிவுஜிவான (intellectual) பெண்ணாக (கதாப்பாத்திரமாக) கட்டமைத்தல்.
இப்படியாக, ஒரு வரலாற்று கதையாசிரியனுக்கு "கட்டுடைத்தல்" (deconstruct/ re construct) "கட்டமைப்பு செய்தல்" (constrct) என்கிற இரு முக்கிய பணி வரலாற்றின் பொருட்டு ஏற்படுகிறது.
- தொடர்ந்து பேசுவோம்.
No comments:
Post a Comment