Religion is regarded as true by common people, by Wise as False and by Rulers as Useful.
-- Seneca
இரயில் பயணங்கள் சுவாரசியமானவை. மேல் சீட்டிற்கும் கீழ் சீட்டிற்கும் தாவித்திரியும் குழந்தையிடம் போராடும் தாயிலிருந்துஇ யாரிடமும் பேசமனமில்லாமல் சன்னலோர சீட்டில் கம்பியை பிடித்துக்கொண்டு காய்ந்த கரிசல் வெளியை வெறித்துப்பார்த்தபடி வரும் அழுக்கான மனிதர் வரை பல மனோபாவங்களை தாங்கி தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கின்றன பல இரயில்கள்.
இரயிலில் சிநேகமான மனிதர்கள்இ நாளிதழ்கள்இ வார- மாத பத்திரிக்கைகள் இவைகளே இரயில்வாசிகளின் சாரசரி அரசியல்இ பொருளாதாரஇ சமயஇ சமூக சிந்தனைகளை வளர்க்கும் இனிய பாசறைகளாய் இருக்கின்றன. சில சமயங்களில் பொழுதுபோக்காய் ஆரம்பிக்கும் விவாதங்கள் நிறைய காரசாரமாய் வெடித்து அமைதியடையும். பொதுவாய் இவை இரவல் வாங்கிய வாரப் பத்திரிக்கைகள்இ நாளிதழ்களிலே தான் துவங்கும்.
அப்படியாக ஏதோ ஒரு மாதத்தில் ஏதோ ஒருநாளில் மேற்சொல்லப்பட்ட ஒரு இரயில் பயணத்தில் துவங்கிய விவாதம்...
'மதத்தையும் மனிதனையும் பிரிக்க முடியாது சார். மதவுணர்வும் இனவுணர்வும் இல்லாதவனுக்கு தாய்ப்பற்றும் தாய்நாட்டு பற்றும் இருக்காது'இ என்றது ஒரு குரல் - நெரிசலில் முகம் தெரியவில்லை கறுப்பு கண்ணாடியும் அதை தடுத்து நின்ற நேர்த்தியான மூக்கும் மட்டுமே தென்பட்டது.
'மதம் இல்லையென்றால் கடவுள் ஏது மனிதன் தான் ஏது? மதம் தான் கடவுளை மனிதனுக்கு அடையாளம் காட்டுகிறது. அந்த அடையாளத்தின் வழியாகதான் ஒருவனுக்கு வாழ்வின் ஒழுக்கங்களும் நெறிமுறைகளும் சொல்லித்தரப்படுகின்றன'இ என்று தொடர்ந்தார்இ அவருக்கு பின்னால் இருக்கையின் விளிம்பில் உட்கார இடம் கிடைத்துவிட்ட ஆசுவாசத்தில் இருந்த மற்றொருவர்.
அவரைத் தொடர்ந்து மெல்ல சூடுபிடித்த பல குரல்களில் ... மனதில் நிறுத்த முடிந்தவை ஒன்றிரண்டுதான்...
'ஆமாம்! மதங்கள் இல்லாமல் இன்று சகலமும் இயங்காது. சில சமயங்களில் மதங்கள் தான் கலங்கரை விளக்கங்களாய் கடவுளைப் பற்றியதும்இ மனித வாழ்க்கையைப் பற்றியதுமான பல புரியாத புதிர்களை விளங்க வைக்கின்றன. பல குழப்பங்களுக்கு மிக எளிதான பதிலையும் கொடுத்து நம்பவும் வைக்கின்றன.'
'மனிதனின் ஆதிக்கும் அந்தத்திற்கும் காரணங்கள் கொடுத்து அவனவன் வாழ்விற்கு ஒரு பிடிப்பையும் வாழ்வாதாரத்தையும் கொடுத்து வாழ வழிகாட்டும் ஞானியாய் விளங்குகிறது மதம்.'
'ஒரு மதத்தின் சடங்குகளும் சம்பிரதாயங்களும் ஒரு அழகியல் கூற்றாகஇ ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தின் வெளிப்பாடாகஇ ஒரு பாரம்பரியத்தின் (சாதியின்!) எச்சமாக எஞ்சி நின்று – வளர்கின்ற நாளைய தலைமுறையை ஒரு குறிப்பிட்ட 'குடும்பம்'இ 'சமூகம்' என்கிற மையத்தோடு இணைக்கின்றன.
...என பல முகம் தெரியா குரல்கள் தங்கள் கருத்துகளை இரயிலின் வளைவுகளுக்கும் நிறுத்தங்களுக்கம் ஈடுகொடுத்து பேசின.
இந்த முகம் தெரியா பொதுக் கருத்துகள்இ வரலாற்றின் பக்கங்களில் மதங்களின் பிண்ணணியில்இ மதங்களை மையப்படுத்தி அரங்கேற்றப்பட்ட கொடுரங்களை கொஞ்சம் மறக்கச் செய்வதாகவே இருந்தன. கிறித்தவர்களிக்கிடையேயான உட்பூசல்கள்இ புனிதப்போர்கள்இ செச்சன்னிய கிறித்தவ-முஸ்லீம் போர்க்குற்றங்கள்இ பௌத்த-சிங்கள இனஉரிமை மீறல்கள் தொடங்கி மும்பைஇ ஒரிசாஇ குஜராத் மதக்கலவரங்கள் (ஒரு கர்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை பிய்த்து எறியும் வெறித்தனங்கள்) வரை அனைத்தும் இக்கருத்துப் பகிர்வில் கொஞ்சம் மறந்து தான் போனது!
ஆனால்இ இந்த மதங்களின் வீச்சு இவ்வளவு அதிகமாக இருந்ததினால் (இருப்பதினால்) விளைந்த மனித மேம்பாடுகள் என்ன என்ன – என்ற எண்ணங்கள் மட்டும் - கடற்கரை மணலில் மறைந்தும் மறையாமலும் கண்ணில்படும் கிளிஞ்சல்களென மனவெளியெங்கும் கொட்டிக்கிடக்கின்றன.
சூஃபி ஞானி ஜலாலுதீன் ரூமியிடம் ஒருவர் கேட்டார். 'குரான் படிப்பது நல்லதா?'. அதற்கு ரூமி சொன்னார் ' அதிலிருக்கும் நன்மைகளை பெறுவதற்கு தகுதியுடையவனாக நீ இருக்கிறாயா என்பது தான் நீ கேட்க வேண்டிய முதல் கேள்வி. அதற்கு விடை கண்டுவிட்டால் பிறகு குரான் படிப்பது நல்லதா கெட்டதா என்பதற்கான விடை உனக்கு எளிதில் தெரிந்துவிடும்' என்றார்.
மதங்களின் நன்மைகளை பெறுவதற்கான நிலையை தகுதியை இழந்த மனிதர்கள் இன்று இறைமையைக் கொச்சைப்படுத்திஇ அதைச் சார்ந்த நம்பிக்கையை நெறிப்படுத்தும் மதங்களையும் தவறாக புரிந்து கொண்டு அடிப்படைவாதத்தையும்இ குறுகிய மனபான்மையையும்இ அறிவுபிறழ்ந்த மிருகமாய் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்கள்.
ஒருவர் வேகமாய் வீட்டிற்குள் நுழைந்தார் வந்தார். முகம் முழுவதும் வெறுப்பும் கோபமும் அப்பியிருந்தது. மனைவிக் கேட்டாள் ' என்ன ஆயிற்று?'
'நமது ஊருக்கு மெசியா வந்திருக்கிறாராம்.'
'அதற்கு என்ன? மகிழ்ச்சியான விசயம் தானே?'
'அது ஒன்றும் இல்;லை. இவ்வளவு காலமும் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்து சுகத்தை எல்லாம் விட்டு விட்டு அவரை பின்பற்ற வேண்டுமே – அதை நினைத்தால் தான் கவலையாயிருக்கிறது.'
'அட நீங்க வேற! இதுக்கா கவலைப்படுறீங்க! இவ்வளவு காலமும் எதிர்பட்ட தடைகளை கஷ்டங்களையெல்லாம் சமாளிக்க வழிகாட்டிய கடவுள் இந்த மெசியாவை சமாளிக்க ஒரு வழியை காட்டமாட்டாரா என்ன?'
மதங்கள் இன்று வாழ்வில் எந்த சூழலையும் சமாளிக்க கற்றுத்தருகின்றன – கடவுளை கூட! அதனால் தான் ஈழப்பிரச்னையோஇ சாதிய மனித உரிமை மீறல்களோ மனசாட்சியை உறுத்துவதோடு நின்று போகிறது! மிஞ்சிப்போனால் 'அய்யோ பாவம்' என்பதை தவிர வேறொன்றும் அதிகமாய் நம்மில் வெளிப்படுவதில்லை. இதை மீறிய செயலாற்றல் தான் இன்றைய தேவை. இயேசுஇ அவர் காலத்தில் இருந்த மதத்தையும் மதவாதிகளையும் கேள்விக்குட்படுத்தி சட்டங்களைஇ தோராவை மறுவாசிப்பு செய்ய விழைந்தார். அதேபோல் இயேசுவையும் அவரின் விழுமியங்களையும் தவறவிட்டுவிட்ட கிறத்தவம் மற்றுமொரு மறுவாசிப்பு செய்யப்பட தயாராய் இருக்கிறதா? ஆதிக்க இந்துமதத்திற்கு மாற்றாக உருவெடுத்த பொளத்தம் (புத்தரின் வழிநெறிகள் - வாழ்வியல் கோட்பாடுகள்) -- இன்று ஆதிக்க மனித உரிமை மீறல்களுக்கான களமாக ஈழத்தில் உருமாறியிருப்பதன் நியாயம்? மனுதர்மம்இ ஆதிக்க - பாசிச அடிப்படைவாதம் இவற்றிற்குள்ளாகவே தன்னை கட்டமைத்துக் கொள்ள முற்படும் மதமாக (இந்துத்துவாவாக) இந்துமதம் மாறியிருப்பதன் பொருள்?
இறுதியாக...
பயணங்களின் நெரிசலில் தவறவிட்ட சில்லறைகளை அவ்வளவாக யாரும் தேடுவதில்லை. நெரிசில் ஏற்படும் எரிச்சல்கள் கோபங்கள் பயணங்கள் முடிந்து இறங்கிய சிறிது கனத்தில் மறைந்துபோகிறன. கூட்டத்தில் கசங்கிய உடைகளை துவைத்து மடித்து மீட்டுக்கொள்கிறோம்;. ஆனால் தவறவிட்ட வாழ்க்கை பயணங்களை அவ்வளவு எளிதாக விடமுடிவதில்லை. வாழ்வில் சில நியாயமான எரிச்சல்களையும் கோபங்களையும் கூட எளிதாக விடமுடிவதில்லை. அவ்வாறு விட்டுவிடுவதும் நியாயமானதில்லை.
எங்கோ வாசித்தது....
'மதவாதிகள் மனிதனைக் கொன்றுவிட்டு கடவுளை தேடிக்கொண்டிருக்கிறார்கள். கடவுளோ மதக் கலவரங்களுக்கு பயந்து நாத்திகர்களின் கதவை தட்டிக்கொண்டிருக்கிறார்.'
No comments:
Post a Comment