உளவியலில் confirmation bias என்கிற ஒரு கருத்துரை உண்டு. அது என்னவென்றால் நாம் நம்பிய ஒன்று சரிதான் என்னும் விதமாக நமது மூளையானது அடுத்தடுத்து வரும் evidences -களையோ அல்லது proof -களையோ நமக்கு காண்பிக்கும். அதாவது எதை நாம் confirmation செய்துகொள்கிறோமோ அதுதான் சரியானது என்பது போலவே நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளும் அமையும்...
ஆனால் உண்மையில்
இது நம் மூளை விளையாடும் ஒருவகையான யுக்தி.
உதாரணத்திற்கு
ஒருவரை நாம் நல்லவர் என்று ஆழமாக நம்பிவிட்டால்... யார் வந்து அவரைப் பற்றித் தவறாகச் சொன்னாலும், நம் மூளை "அவரெல்லாம் அப்படி இல்லை" என்றும் "அவர் அப்படி செய்ய வாய்ப்பே இல்லை", என்றும் தான் சாதிக்கும்.
இதை கவனித்துப் பார்த்தால் ...
நம் வாழ்க்கையில் இது போன்ற அநேக தருணங்களை கடந்து வந்திருப்போம்.
ஒரு ஆசிரியராக நம் மாணவர்களிடையே நம்மையும் அறியாமல் இதைச் செயல்படுத்திருக்க வாய்ப்புகள் அதிகம்.
எப்படி என்று பார்ப்போம்?
ஒரு மாணவர் தவறொன்றைச் செய்து, அதை ஆசிரியர் கவனித்ததாக வைத்துக்கொள்வோம். அப்போது, அந்த மாணவன் "தவறானவன்", என்கிற ஒரு அபிப்ராயம் உருவாகி, பின் அந்த மாணவர் எதைச் செய்தாலும், அது அந்த ஆசிரியரின் அகராதியில் தவறானதாகவே இருக்கும்.
இதை விழிப்புணர்வுடன்
அணுகினால் மட்டுமே இதிலிருந்து அந்த ஆசிரியரால் விடுபட முடியும்.
பெற்றோர்களுக்கும் இது பொருந்தும்.
No comments:
Post a Comment