Monday, February 12, 2024

திமிங்கல விழுகை' (whale fall)

ஆங்கிலத்தில் திமிங்கலத்தை பற்றிய பழமொழி ஒன்று  உண்டு - "when the whale falls everything grows".  இந்த பழமொழிக்கு பின்னால் சுவாரஸ்யமான நிகழ்வு உள்ளது. அது தான் ' whale fall' (திமிங்கல விழுகை) என்கிற நிகழ்வு .  இந்த "திமிங்கல விழுகை' (whale fall), என்பது இயற்கையின் அபூர்வமான நிகழ்வுகளில் ஒன்றாகும். 

திமிங்கலத்திற்கு தன் இறப்பை பற்றிய ஒரு அமானுஷ்ய உணர்வு ஒன்று உண்டு. அதனால் தன் இறப்பை  முன்கூட்டியே உணர முடியும். அவ்வாறு தன் இறப்பை உணர்ந்த பிறகு, தன் கூட்டத்தைவிட்டு மெல்ல விலகி நெடுந்தூரத்திற்கு வந்து தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளும். பின் தன் இறப்பிற்காக கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கும்.  இறுதியாக, இந்த "whale fall" என்கிற நிகழ்வை ஒரு சடங்கை (ritual) போல் இரசித்து, ஆழ்ந்து அனுபவித்து செய்யும்.  
அதாவது தனது ஒட்டுமொத்த பலத்தையும் கூட்டி சமுத்திரத்திற்கு மேலாக எழும்பி குதித்து ஒரு பெரிய வீழ்வை நிகழ்த்தும்.  ஒரு உன்னதமான,  முழுநிறைவான (perfect), நல்லதொரு தோரணையான  (posture ) வீழ்தலுக்காக தொடர்ந்து முயற்சி செய்யும். 
எந்தவொரு வீழ்தலை நிறைவானதாக அது உணர்கிறதோ அந்த வீழ்தலே ( fall ) அதனுடைய கடைசி வீழ்தலாக இருக்கும். அப்படியாக மேலெழும்பி குதித்து வீழ்ந்தவுடன்  அந்த கடைசி வீழ்தலோடு தன் கண்களை மூடி இறுதி மூச்சைவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக கடலின் அடிமட்டத்தை நோக்கி மூழ்கத் துவங்கும்.

அடுத்த இருநூறு வருடங்களுக்கு அது கடலின் ஆழத்தில் உள்ள பல்லுயிர்சூழலை வளப்படுத்தியவாறு முற்றிலுமாக அழிந்துபோகும்.

பெரும்பாலும், இறந்த  திமிங்கலங்களின் உடல்கள் கரையொதுங்கிவிடுகிற நிலையில், இந்த "whale fall" நிகழ்வு அபூர்வமான, அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஒவ்வொரு செயலும், சொல்லும் இவ்வாறு இரசித்து, அனுபவித்து, நிறைவான whale fall போன்று செய்யப்பட்டால் எப்படி இருக்கும்?  ஒவ்வொரு  வகுப்பையும், பாடத்தையும் 
 எடுக்கும்போதும், குழந்தைகளோடு உரையாடும்போதும், இப்படியானதொரு  அணுகுமுறையோடு அந்த ஆசிரியர் இருந்தால்...???

கேட்க நன்றாகத் தான் இருக்கிறது.

ஆனால்...
எல்லா திமிங்கலங்களுக்கும் இப்படியான ஒரு அர்த்தமுள்ள, ஆழமான whale fall வாய்ப்பதில்லை இல்லையா?

தொடர்ந்து பேசுவோம்.

அந்துவன் கபிரியேல்
கலைடாஸ்கோப்

No comments:

Post a Comment