Monday, February 19, 2024

பாஸா? பெய்லா? PART 2

முந்தைய கட்டுரையில், நன்னூல் பேசிய ஆசிரியருக்கான இலக்கணமாக சிலவற்றைப் பார்த்தோம். 

அப்படியென்றால் மாணவர்களுக்கான இலக்கணம் பற்றியும் " நன்னூல்" ஏதேனும் பேசியிருக்கிறதா?

ஆமாம் பேசியிருக்கிறது.

எத்தனை வகையான  மாணவர்கள் இருக்கிறார்கள், அவர்களை ஆசிரியர்கள் எப்படி புரிந்துகொள்ளலாம் என்பதைப் பற்றி பேசியிருக்கிறது.

பின்வரும் பாடலை கவனியுங்கள்.

"அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்."

அதாவது இப்பாடல்
மாணாக்கர்களை 
அன்னம் , பசு, மண், கிளி, இல்லிக்குடம் (ஓட்டைக்குடம்), ஆடு, நெய்யரி ( வடிகட்டி) போன்றவர்களாக வகைப்படுத்துகிறது.

சரி  அது என்ன அன்னம், மா போன்றவை ?

சற்று விரிவாகப்  பார்ப்போம்.

அன்னம், பாலையும் தண்ணீரையும் பிரித்து அருந்தும் இயல்பு  உடையது. அது  போல  சிறந்த மாணவர்கள் தேவை இல்லாததை விட்டு விட்டு தேவையானதை மட்டும் படிப்பார்கள்.

பசு, புல்லைக் கண்டதும்  வயிறு முட்ட வேகமாக நிரப்பிக்  கொண்டு,பின் ஆற அமர அசை  போடும். அது போல சிறந்த மாணவர்கள் நல்ல ஆசிரியரையோ , புத்தகத்தையோ கண்டால் வேகமாக முடிந்த வரை அறிவை   பெற்றுக் கொண்டு  பின் தனிமையில் அதைப் பற்றி  ஆராய்ந்து, சிந்தித்து  தெளிவு பெறுவார்கள்.

இது இரண்டும் முதல் தரமான மாணவனின்  இலக்கணம்.

"மண்ணோடு கிளியே" - இடை மாணவனுக்கு இலக்கணம்.

ஒரு உழவன் எவ்வளவு பாடு படுகிறானோ அந்த அளவுக்கு நிலம் (மண்) பலன் தரும். அது போல இடை மாணவன், ஒரு ஆசிரியர் எவ்வளவு கஷ்டப்பட்டு சொல்லித் தருகிறாரோ  அந்த அளவு அவனும்  படிப்பான். அதுக்கு மேலே படிக்க மாட்டான். பாடநூலில் என்ன இருக்கிறதோ அவ்வளவு தான் படிப்பான். மேற்கொண்டு படிப்பது எல்லாம்  கிடையாது.

கிளி, சொன்னதைத் திருப்பிச்  சொல்லும். அது போல இடை மாணவன் ஆசிரியர்  சொன்னதை அப்படியே உள்வாங்கி , மனப்பாடம் செய்து மீண்டும் ஒப்பிப்பான்.  அவ்வளவுதான்.

இந்த இரண்டும் இடை மாணவனுக்கான இலக்கணம்.

"இல்லிக் குடமா டெருமை நெய்யரி - கடை மாணவர்".

இல்லிக் குடம் என்றால் உடைந்த குடம்/ ஓட்டைக்குடம். அதில் எவ்வளவு  நீர் விட்டாலும்  நிறையாது. நீர் வெளியேறிக்  கொண்டே இருக்கும். அதுபோல கடை மாணவனுக்கு எவ்வளவு  சொல்லித் தந்தாலும் புத்தியில்  ஒன்றும்  நிற்காது. மறந்து  போவான்.

ஆடு - ஒரு செடியை முழுவதும்  உண்ணாது. ஒவ்வொரு செடியிலும் கொஞ்சம்  கொஞ்சமாக  உண்ணும். எல்லா செடியிலும் வாய் வைக்கும். ஒன்றையும்  முழுமையாக  உண்ணாது. அது போல கடை மாணவன் ஒன்றையும்  ஒழுங்காகப் படிக்க மாட்டான். இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்.... இந்த ஆசிரியரிடம் கொஞ்சம் அந்த ஆசிரியரிடம் கொஞ்சம் என்று நுனிப்புல் மேய்ந்து ஒன்றும் படிக்க மாட்டான்.

எருமை -  குளத்தில் நீர் தெளிவாக இருந்தாலும் அதில் இறங்கி, அதை கலக்கி,  சேறும் நீருமாக சேர்ந்து  குடிக்கும். ஆனால், அன்னம் நீரை விலக்கி பாலை மட்டும்  குடிக்கும்.  

நெய்யரி என்பது வடி கட்ட உபயோகப் படுத்தும் துணி. வடிகட்டும் துணி நல்லதை  எல்லாம்  விட்டு விட்டு கசடை தன்னுள் தக்க வைத்துக்கொள்ளும். அது போல, கடை மாணவன், நல்லதை எல்லாம் விட்டு விட்டு, தேவை இல்லாததை  பிடித்து வைத்துக்  கொள்வான்.

இவ்வாறு
ஒரு ஆசிரியன் தன்னிடம் வரும் மாணவனை சரியாக எடை போட வேண்டும்.  அப்போதுதான்  அவனுக்கு சரியாக பாடம் சொல்லித் தர  முடியும் என்கிறது " நன்னூல்"

இப்போது சொல்லுங்கள்... 
மாணவனை அறிந்து அதன்படி பாடம் நடத்துவே ஒரு சிறந்த ஆசிரியருக்கான இலக்கணம் இல்லையா? 

அப்போது தான் ஆசிரியரும் பாஸ், மாணவரும் பாஸ்.

என்ன சரிதானே?

- தொடர்ந்து பேசுவோம்.

பேரன்புடன்
அந்துவன் கபிரியேல்
கலைடாஸ்கோப்

Friday, February 16, 2024

நீங்க பாஸா? பெய்லா? - PART 1 (PARENT ELIGIBILITY TEST - PET)

கி.மு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 17 ஆம் நூற்றாண்டு வரை ஏறக்குறைய 40 க்கும் மேற்பட்ட தமிழுக்கான இலக்கண நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் தொல்காப்பியத்தை பற்றி நம்மில் பலருக்கும் தெரியும் - இது தொல்காப்பியரால் கி.மு 3ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக சொல்லப்படுகிறது. பிறகு, அதன் வழிநூலாக, அதாவது  வழிகாட்டி நூலாக எழுதப்பட்டது தான் "நன்னூல்" என்னும் இலக்கண நூல். கி.பி 12ம்/13ம் நூற்றாண்டில் பவணந்தி என்னும் சமண மத முனிவரால் இது எழுதப்பட்டது.  

இந்த கட்டுரையில் "நன்னூல்" பற்றிய சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

பொதுவான இலக்கணம் பற்றி பேசும் இந்நூல், ஒரு ஆசிரியருக்கான இலக்கணம் பற்றியும் பேசுகிறது.

அதாவது...
ஒருவர் ஆசிரியராக இருப்பதற்கான இலக்கணம் மற்றும் ஒரு பாடத்தை  நடத்துவதற்கான  இலக்கணம், 
...என எல்லாவித இலக்கணங்களையும் பேசுகிறது "நன்னூல்".

உதாரணத்திற்கு,  ஆசிரியருக்கான இலக்கணமாக பின்வரும் குணநலன்களை குறிப்பிடுகிறது. 

ஆசிரியர் என்பவர் நிலம், மலை, நிறைகோல் (தராசு), மலர் போன்றவற்றினையொத்த குணநலன்களை கொண்டிருப்பார் என உரைக்கிறது.

கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
முதலாவதாக, நிலம் -  அதாவது நிலத்தை போன்று பரந்துவிரிந்து, எல்லையில்லா வகையில் கல்வியறிவு கொண்டிருத்தல். நிலம் எவ்வளவு பாரத்தையும் சுமப்பது   மட்டுமல்லாமல், மனிதர்கள் அகழ்தல், பிளத்தல் முதலிய தவறுகளை செய்தாலும், தம்மை வருத்துபவரையும் தாங்கும் உறுதியையும் பொறுமையையும் கொண்டிருத்தல் மற்றும் பருவத்தில் உழுகின்றவரின் (உழைக்கின்றவரின்) முயற்சிகளுக்கு தகுந்த பலன்களை தருதல் என நிலத்தின் குணங்களை பெற்றிருப்பார்.

இரண்டாவதாக, மலை -  அதாவது மலையைப் போல், தன் கல்வியறிவால் பெரியவராயிருப்பார்.  மலையானது, பலவற்றை தன்னிடத்தில் கொண்டிருப்பதுபோல் பலவித  புலமையை கொண்டிருப்பார். அவரை காணாதவரும் (தூரத்தில் இருப்பவரும்) அவரைப் பற்றி தெரிந்து கொள்ளும் அளவிற்கு உயர்ந்த புகழை கொண்டிருப்பார். தம்மிடம் வரும் மாணவர்கள் வசதி வாய்ப்பு இன்றி போதனைக்குரிய  போதிய  ஊதியம் ( செல்வத்தை) கொடுக்க இயலாத போதிலும் தம்மிடமுள்ள கல்விச் செல்வத்தை   அள்ளித்தருபவராய் இருப்பார்.

மூன்றாவதாக நிறைகோல் ( தராசு) - தராசைப் போன்று எவ்வித பாரபட்சமுமின்றி நடுநிலையுடன் கற்பிப்பவராக இருப்பார்.

இறுதியாக மலரைப் போல் நன்மையானவற்றிற்கு உரியவராகவும், இனியவராகவும், மென்மையான பண்பு கொண்டவராகவும், கற்பிப்பதில் முகம் மலர்ந்தவராகவும் இருப்பார்.

எப்படி இருக்கிறது ஒரு ஆசிரியருக்கான இலக்கணம், பார்த்தீர்களா? இப்போது நம்மிடம் வருவோம்.

ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் பெற்றோர், இரண்டாவது பெற்றோர் ஆசிரியர் என சொல்லப்படுகிறது. ஏதோ ஒருவகையில் ஆசிரியராகவோ, பெற்றோராகவோ குழந்தைகளோடு பயணிக்கும் நமக்கு மேற்கூறிய குணங்களை குறித்து நம் குழந்தைகள் ஒரு exam  - Parent Eligibility Test or Teacher Eligibilty Test   வைத்தால் நாம் பாஸ் ஆகிவிடுவோமா? 

நினைத்து பார்க்கவே ஜாலியாக இருக்கிறது அல்லவா? ம்...ம்...ம்... சிலருக்கு இப்பவே exam fever வந்திருக்கும்.
 
தொடர்ந்து பேசுவோம்.

அன்புடன்
அந்துவன் கபிரியேல்
கலைடாஸ்கோப்
____________________________
குறிப்பு : நன்னூல் பாடல்கள் 26  - 30 ஆசிரியர் இலக்கணம் பற்றி பேசுகிறது.

Monday, February 12, 2024

அம்மாவ பிடிக்குமா? அப்பாவ பிடிக்குமா?

குழந்தைகளிடம் நாம் வழக்கமாக விளையாட்டாக கேட்கும் கேள்விகளில் ஒன்று...

"உனக்கு அம்மாவ பிடிக்குமா இல்ல அப்பாவ பிடிக்குமா?" என்பது. 

நம்மில் பலரும் இப்படி கேட்டிருப்போம் இல்லையா?

உண்மையைச் சொல்லனும்னா...
... இயல்பாகவே அம்மாவிடம் தான் ஒரு குழந்தை அதிக நெருக்கம் கொண்டிருக்கும். கரு உருவானதிலிருந்து ஏறக்குறைய பத்து மாதங்கள் தாயினுடைய உடலின் ஒரு பகுதியாக வாழும் ஒரு குழந்தை உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மற்றவரைவிட தன் தாயிடம் தானே நெருக்கம் கொள்ள முடியும்? அது தான் இயல்பானதும் கூட.

 அப்புறம் எப்படி சில குழந்தைகள் தந்தையிடம் ஒட்டிக்கொள்கின்றன?

ஒரு தந்தையும் தன் குழந்தையிடத்தில் ஒரு தாய்க்கு இணையான நெருக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்ன? அது சாத்தியமா?

ஆமாம் முடியும். 

குழந்தை பிறப்பதற்கு முன், தந்தை தன் குழந்தை தாயின் வயிற்றிலிருக்கும் போதே  தாயிடமும் குழந்தையிடமும்  அன்போடு உரையாடுவது மற்றும்  தொடர் உணர்வு செயல்பாடுகளான தாயின் வயிற்றை தடவிக்கொடுத்தல், முத்தம் கொஞ்சுதல் வழியாகவும், பிறகு குழந்தை பிறந்தபின் குழந்தையை தாங்கிக்கொள்ளுதல், மார்போடு  அணைத்துகொள்ளுதல், உரையாடுதல் எனத்தொடங்கி விளையாடுதல் வரையிலான செயல்பாடுகள் வழியாக,  தாய் கொடுக்ககூடிய அதே நெருக்கமான உணர்வை  குழந்தையினிடத்தில் உருவாக்கமுடியும்.

இதை இன்னும் எளிமையாக புரிந்துகொள்ள ஹேரி ஹார்லோ (Harry Harlow) என்னும் அமெரிக்க உளவியலாளர் ( American psychologist) 1960s - களில் குரங்குகளை வைத்து செய்த ஆராய்ச்சியை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

ஹார்லோ, 
தாயிடம் இருந்து பிரித்தெடுத்த குரங்குகளை  இரண்டு வகையான
"பதிலித் தாய் பொம்மைகளை" ( surrogate mother) வைத்து சோதனைக்கு உட்படுத்தினார்.

மரக்கட்டை மற்றும் ஒயரினால் செய்யப்பட்ட  பொம்மைத்தாயிடம் பால்( உணவு ) மட்டும் கிடைக்குமாறும், பஞ்சினால் செய்யப்பட்ட  மற்றொரு  பொம்மைத்தாயிடம் பால் ( உணவு) கிடைக்காதவாறு பார்த்துகொண்டார்.

குரங்குகள் பெரும்பாலும் பஞ்சினால்  செய்யப்பட்ட பதிலித்தாயிடமே அதிகம் அடைக்கலம் கொண்டிருந்தன. பசித்த போது மட்டுமே கட்டை மற்றும் ஒயரினால் செய்யப்பட்ட பதிலித்தாயிடம் வந்தன.

மேலும், சத்தமிடும் ஒரு பொம்மையை கூண்டில் வைத்தபோது பயத்தில் அவை வேகமாக ஓடிச்சென்று பஞ்சினாலான பதிலி தாய்க்குரங்கை  கட்டிக்கொண்டன.

ஆக தொடுதல் உணர்வு சார்ந்த செயல்பாடுகள் ஒரு குழந்தையினிடத்தில் அதிக நெருக்கத்தையும், பாதுகாப்பு உணர்வையும், ஒரு comfort zone  - யையும் உருவாக்க முடியும்.

எனவே இப்போ  சொல்லுங்க...

உங்க குழந்தை அம்மா பிள்ளையா? அப்பா பிள்ளையா? 

அம்மா மட்டுமல்ல
அப்பாவும் அம்மாவுடன்  இணைந்து ஒரு குழந்தைக்கு அழகான நெருக்கமான ஒரு உணர்வை கொடுக்கமுடியும் தானே?

- தொடர்ந்து பேசுவோம்

அந்துவன் கபிரியேல் 
கலைடாஸ்கோப்

confirmation bias

உளவியலில் confirmation bias என்கிற ஒரு கருத்துரை உண்டு. அது என்னவென்றால் நாம் நம்பிய ஒன்று சரிதான் என்னும் விதமாக நமது மூளையானது அடுத்தடுத்து வரும் evidences -களையோ அல்லது proof -களையோ நமக்கு காண்பிக்கும். அதாவது எதை நாம் confirmation செய்துகொள்கிறோமோ அதுதான் சரியானது என்பது போலவே நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளும் அமையும்... 
ஆனால் உண்மையில்
இது நம் மூளை விளையாடும் ஒருவகையான யுக்தி.

உதாரணத்திற்கு
ஒருவரை நாம் நல்லவர் என்று ஆழமாக நம்பிவிட்டால்...  யார் வந்து அவரைப் பற்றித் தவறாகச் சொன்னாலும், நம் மூளை "அவரெல்லாம் அப்படி இல்லை" என்றும் "அவர் அப்படி செய்ய வாய்ப்பே இல்லை", என்றும் தான் சாதிக்கும். 

இதை கவனித்துப் பார்த்தால் ...
நம் வாழ்க்கையில் இது போன்ற அநேக தருணங்களை கடந்து வந்திருப்போம்.

ஒரு ஆசிரியராக நம் மாணவர்களிடையே நம்மையும் அறியாமல் இதைச் செயல்படுத்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

எப்படி என்று பார்ப்போம்?

ஒரு மாணவர் தவறொன்றைச் செய்து, அதை ஆசிரியர் கவனித்ததாக வைத்துக்கொள்வோம். அப்போது, அந்த மாணவன் "தவறானவன்", என்கிற ஒரு அபிப்ராயம் உருவாகி, பின் அந்த மாணவர் எதைச் செய்தாலும், அது அந்த ஆசிரியரின் அகராதியில் தவறானதாகவே இருக்கும்.

இதை விழிப்புணர்வுடன்  
அணுகினால் மட்டுமே இதிலிருந்து அந்த ஆசிரியரால் விடுபட முடியும்.

பெற்றோர்களுக்கும் இது பொருந்தும்.

திமிங்கல விழுகை' (whale fall)

ஆங்கிலத்தில் திமிங்கலத்தை பற்றிய பழமொழி ஒன்று  உண்டு - "when the whale falls everything grows".  இந்த பழமொழிக்கு பின்னால் சுவாரஸ்யமான நிகழ்வு உள்ளது. அது தான் ' whale fall' (திமிங்கல விழுகை) என்கிற நிகழ்வு .  இந்த "திமிங்கல விழுகை' (whale fall), என்பது இயற்கையின் அபூர்வமான நிகழ்வுகளில் ஒன்றாகும். 

திமிங்கலத்திற்கு தன் இறப்பை பற்றிய ஒரு அமானுஷ்ய உணர்வு ஒன்று உண்டு. அதனால் தன் இறப்பை  முன்கூட்டியே உணர முடியும். அவ்வாறு தன் இறப்பை உணர்ந்த பிறகு, தன் கூட்டத்தைவிட்டு மெல்ல விலகி நெடுந்தூரத்திற்கு வந்து தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளும். பின் தன் இறப்பிற்காக கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கும்.  இறுதியாக, இந்த "whale fall" என்கிற நிகழ்வை ஒரு சடங்கை (ritual) போல் இரசித்து, ஆழ்ந்து அனுபவித்து செய்யும்.  
அதாவது தனது ஒட்டுமொத்த பலத்தையும் கூட்டி சமுத்திரத்திற்கு மேலாக எழும்பி குதித்து ஒரு பெரிய வீழ்வை நிகழ்த்தும்.  ஒரு உன்னதமான,  முழுநிறைவான (perfect), நல்லதொரு தோரணையான  (posture ) வீழ்தலுக்காக தொடர்ந்து முயற்சி செய்யும். 
எந்தவொரு வீழ்தலை நிறைவானதாக அது உணர்கிறதோ அந்த வீழ்தலே ( fall ) அதனுடைய கடைசி வீழ்தலாக இருக்கும். அப்படியாக மேலெழும்பி குதித்து வீழ்ந்தவுடன்  அந்த கடைசி வீழ்தலோடு தன் கண்களை மூடி இறுதி மூச்சைவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக கடலின் அடிமட்டத்தை நோக்கி மூழ்கத் துவங்கும்.

அடுத்த இருநூறு வருடங்களுக்கு அது கடலின் ஆழத்தில் உள்ள பல்லுயிர்சூழலை வளப்படுத்தியவாறு முற்றிலுமாக அழிந்துபோகும்.

பெரும்பாலும், இறந்த  திமிங்கலங்களின் உடல்கள் கரையொதுங்கிவிடுகிற நிலையில், இந்த "whale fall" நிகழ்வு அபூர்வமான, அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஒவ்வொரு செயலும், சொல்லும் இவ்வாறு இரசித்து, அனுபவித்து, நிறைவான whale fall போன்று செய்யப்பட்டால் எப்படி இருக்கும்?  ஒவ்வொரு  வகுப்பையும், பாடத்தையும் 
 எடுக்கும்போதும், குழந்தைகளோடு உரையாடும்போதும், இப்படியானதொரு  அணுகுமுறையோடு அந்த ஆசிரியர் இருந்தால்...???

கேட்க நன்றாகத் தான் இருக்கிறது.

ஆனால்...
எல்லா திமிங்கலங்களுக்கும் இப்படியான ஒரு அர்த்தமுள்ள, ஆழமான whale fall வாய்ப்பதில்லை இல்லையா?

தொடர்ந்து பேசுவோம்.

அந்துவன் கபிரியேல்
கலைடாஸ்கோப்

Monday, January 11, 2021


 இன்று இந்தியாவில் பெண் கல்விக்கு வித்திட்ட வீரத்தாய்இ மகாத்மா சாவித்ரிபாய் பூலேவின் பிறந்த தினம். இந்த நாளை நான் எப்பொழுதும் ... 1. பெண் ஆசிரியர்கள் தினமாகவும்இ 2. சமத்துவ கல்வி தினமாகவும் 3. இந்தியக்கல்வியின் புரட்சி தினமாகவும் .... என் மாணவர்களிடையே நினைவுறுத்திஇ வரலாற்றைச் சுவடுகளைச் சொல்லிக் கொண்டாடுவது வழக்கம். ஆசிரியர்கள் என்று எடுத்துக்கொண்டால் அதில் ஏறக்குறைய 60 வழ 70 விழுக்காட்டிற்கு மேலாக பெண்கள் தான் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். இந்தியச் சூழலில் ஒரு ' ஆண்' ஆசிரியராக இருப்பதைவிட ஒரு 'பெண்' ஆசிரியர் இருப்பது மிகுந்த சவாலான ஒன்றாகத் தான் எனக்கு தோன்றுகிறது. அதிகாலையிலேயே எழுந்து வீட்டிலிருக்கும் அனைவருக்கும் காபி போடுவதில் ஆரம்பித்துஇ காலை உணவுஇ மதிய உணவு இரண்டையும் தயாரித்து வைத்துவிட்டு ( சில வீடுகளில் பரிமாறவும் செய்துவிட்டுஇ விளையாட்டு குழந்தை(களை)யும் சாப்பிட வைத்துவிட்டு)....அவசர அவசரமாகஇ சாப்பிட்டும் சாப்பிடாமல்... பள்ளிக்குள் புன்னகையுடன் மாணவர்களை அனைத்தபடி நுழையும் பெண் ஆசிரியர்கள். (இதில் கூட்டுக் குடும்பத்தில் மருமகளென்றால் என்றால் சுத்தம் - அந்த ஆசிரியரின் நிலை) இரவு குடும்பத்தினர் அனைவரும் தூங்கிய பிறகு( குழந்தைகளையும் தூங்க வைத்துவிட்டு அடுத்த நாள் வகுப்பிற்கான தயாரிப்புகளை முடித்து ....பின்னிரவில் தூங்கி ...பின் அதிகாலையில் அவசர அவசரமாக ஓடி வந்து பள்ளி பேருந்திலோஃ பொது பேருந்திலோ ஏறும் பெண் ஆசிரியர்கள் ... குளித்து முடித்த தலைமுடியை உலர்த்தகூட நேரமில்லாமல் பள்ளிக்கு வந்து ளவயகக சழழஅ கயn க்கு அடியில் பள்ளி முதல்வர் சழரனௌ க்கு வருவதற்கு முன் அவசர அவசரமாக உலர்த்தி வகுப்பிற்கு ஓடும் பெண் ஆசிரியர்கள்... குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் அவரவர்களுடைய 'அம்மாவின்' மறுவுருவமாக பெண் ஆசிரியர்கள்... இப்படி உழைத்தும் வருட கடைசியில் கொடுக்கப்படும் ஐnஉசநஅநவெ - ல் 100 ரூபாய் குறைந்தால் கூட கணவன் மற்றும் மாமியார் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல் முடியாமல் பள்ளி தலைமையிடமும்இ நிர்வாகத்திடமும் தன் பணித்திறமைகளையும்இ pநசகழசஅயnஉந பற்றி பேசி போராடும் பெண் ஆசிரியர்கள். ( இன்றும் யவஅ உயசன கணவனிடம் தான் இருக்கும்இ அவர் கேட்பார் ' இன்னும் ஏன் சம்பளம் போடவில்லை) வீட்டில் கணவனிடம்ஃ குடும்பத்தினரிடமும் வாங்கிய திட்டுகளின்இ அடிகளின் வலி மறைத்து புன்னகையுடன் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள்..... திருமணமாகாத பெண் ஆசிரியரென்றால் மாலை பள்ளிமுடிந்தவுடன் இருட்டுவதற்குள் பஸ் பிடித்து வீட்டிற்கு வந்துவிட வேண்டும். இல்லையென்றால் அக்கம்பக்கத்தினர் பேச்சுகளுக்கு ஆளாக நேரிடும். நிறைய சொல்ல இருக்கிறது... எல்லாவற்றையும் மனதில் கொண்டு அனைத்து பெண் ஆசிரியர்களையும் கை கூப்பி சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். _________________________________________ சாவித்ரிபாய் பூலே பள்ளிக்கு செல்லும் வழியில் அவர் மீது கற்களையும்இ சேற்றையும்இ சாணத்தையும் அள்ளி வீசுவார்களாம். சாவித்ரி இதற்காகவே இன்னொரு உடையை ( பள்ளி சென்றதும் மாற்றிக்கொளவதற்கான மாற்று உடையொன்றை) எப்பொழுதும் உடன் வைத்திருப்பாராம். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். இந்தியாவில் முதன் முதலில் பெண்களுக்கான பள்ளியை நடத்தியவர். . அனைவருக்கும் பெண் ஆசிரியர் தின வாழ்த்துக்களும்இ வணக்கங்களும். குறிப்பு: 'எல்லா பெண் ஆசிரியர்களும் நீங்கள் குறிப்பிடுவது போல் இல்லை' என்கிற சிலரின் 'மைண்ட் வாய்ஸ்' கேட்கத்தான் செய்கிறது. ஆனாலும் உங்களால் மேற்சொல்லப்பட்டவைகள் இல்லவே இல்லை என்று மறுக்க முடியாது.

- கபிரியேல் ஆபுத்திரன்.

Courtesy: Savutribhai Pule - 190th Birth anniversary. Art by : Malvika Raj

Monday, August 24, 2020

ஒரு வரலாற்று சிறுகதையாளனின் அனுபவம்: பகுதி 2


__________________________________________

"யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்து எதற்கு? ஒரு இலக்கியவாதி அல்லது எழுத்தாளன் என்பவன் சமூகத்தின் பிரதிபலிப்பாக மட்டுமல்லாமல், சமூகத்தின் மனசாட்சியாகவும் இருக்க அழைக்கப்படுகிறான்.
அதிலும் குறிப்பாக வரலாற்றுச் சிறுகதை எழுதுபவன் வரலாற்றினூடாக பயணித்து, சமகால (இன்றைய) வரலாற்றை கட்டமைப்பதில் பெரும் பங்காற்றுகிறான். இது அவனுக்கு மிகவும் சிக்கலான,  நுட்பமான சவாலாவும் இருக்கிறது."
            -Gabriel Aaputhiran.

'வரலாற்று சிறுகதை எழுதலாமே', என்கிற எண்ணம் எழுந்தவுடன் இரண்டு விசயங்களைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். 

முதலாவது 'சிறுகதை' என்பதைப்பற்றியது இரண்டாவது 'வரலாறு' என்பதைப் பற்றியது.

ஏற்கனவே பள்ளியில் வரலாற்றாசிரியர் (History Teacher) என்கிற அடிப்படையில் வரலாற்றை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டிருப்பதால் இயல்பாகவே வரலாற்றாளனாக (Historian) என்னை உருவாக்கிக்கொள்ளும் செயல்பாடுகளை மிக கவனமாக என்னிடத்தில் கட்டமைத்துக்கொண்டிருந்தேன். 

அந்த வகையில் வரலாற்றை பற்றிய புத்தக வாசிப்பைத்தாண்டி (book reading) பயணங்களின் வழியான கள வாசிப்பு (field reading) என்பதையும் மிக முக்கிய கூறாக (factor) மாற்றிக்கொண்டேன். 

ஏனெனில் ஏட்டில் (textual context) இருக்கும் வரலாற்றிற்கும் நேரடியாக களத்தில் (field context) கிடைக்கப்பெறும் வரலாற்றிற்கும் பெருத்த வேறுபாடு இருப்பது மிக அப்பட்டமான உண்மை என்பதை கண்டுபிடித்திருந்தேன்.

இதனோடு கூட என் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தது போல வாய்மொழி (oral tradition) என்கிற வரலாற்றைப் பற்றி மிக கவனமாக இருந்தேன். வாய்மொழி அல்லது நாட்டார் வழக்காற்றியல் (folklore) அடிப்படையிலான வரலாற்றை வாசிப்பதில் புராணச்செய்திகளுக்கும் (mythological aspect) வராலாற்றுச் செய்திகளுக்குமான (Historical - factual aspect) மிக நுட்பமான வேறுபாட்டின் பொருட்டு கவனமுடன் இருத்தல் அவசியமாகிறது.

உதாரணமாக, 'மிகைப்படுத்தப்படுதல்' மற்றும் 'பிம்ப கட்டமைத்தல்' என்பது புராணமயமாக்கலின் (mythification factors) கூறுகளாக உள்ளன. ஆனால் வரலாறு என்பது இந்த அதீத பிம்ப கட்டமைத்தலையும், மிகைப்படுத்தலையும் மிக உறுதியாக, கடுமைத்தன்மையுடன் (strictly avoids) தவிர்த்துவிடுகிறது. அதற்கு மாறாக மிக எதார்த்தமான(realistic) அறிவியல் (scientific) பூர்வமான சார்புநிலையற்ற (neutral) ஒரு நிகழ்வை நிகழ்வாக மட்டுமே கட்டமைக்க விழைகிறது.

இதன் அடிப்படையிலே, எனது 'ஒரு விறலியின் காதல்' என்கிற சிறுகதையில் வரும் பரவை நாச்சியார் (ஆடல்மகளிர்) இராஜேந்திர சோழனை வெகு இயல்பாக ஒருமையில் அழைத்து உரையாடுவதாக காட்சிகளை அமைத்திருந்தேன்.

இதற்கான காரணங்கள் பின்வருவன:

முதலாவது, இராஜேந்திர சோழன் என்பவரைப் பற்றி பொதுபுத்தியில் ( common sense) உருவாக்கப்பட்டிருக்கும் மிகைப்படுத்தப்பட்ட பிம்பத்தை கட்டுடைப்பு செய்தல்.

இரண்டாவது, விலைமகளிர் என்பதை 16 மற்றம் 17 ஆம் நூற்றாண்டுகளின் பார்வையில் வைத்து பார்க்காமல் 10 மற்றும் 11 ஆம் நூற்றாண்டுகளின் பார்வையில் அல்லது வரலாற்றின் அடிப்படையில் வைத்து பார்த்து  பரவை நாச்சியாரை ஒரு தன்னிச்சயையான, சுதந்திரமான, அறிவுஜிவான (intellectual) பெண்ணாக (கதாப்பாத்திரமாக) கட்டமைத்தல்.

இப்படியாக, ஒரு வரலாற்று கதையாசிரியனுக்கு "கட்டுடைத்தல்" (deconstruct/ re construct) "கட்டமைப்பு செய்தல்" (constrct) என்கிற இரு முக்கிய பணி வரலாற்றின் பொருட்டு ஏற்படுகிறது.

 - தொடர்ந்து பேசுவோம்.